காரனோடை மேம்பாலத்தில் சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சோழவரம்:சோழவரம் அடுத்த காரனோடை பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் மூன்று உயர்மட்ட பாலங்கள் அமைந்து உள்ளன.இரண்டு பாலங்கள் தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கும். ஒன்று, இணைப்பு சாலையில் பயணிப்பதற்கும் என உள்ளது. இதில், சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் வழித்தடத்திற்கான பாலத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்து உள்ளது.சேதம் அடைந்த பகுதி இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிப்பதற்காக,பாலத்தின் நடுவில் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாகனங்கள் சேதம் அடைந்த பகுதியை கடக்கும்போது தடுமாற்றம் அடைகின்றன. இடது, வலது என பயணிக்கும்போது பின்னால் வரும் வாகனங்கள் நிலை தடுமாறுகின்றன. இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுவதற்கு அதிக வாயப்புகள் உள்ளன.சேதம் அடைந்து உள்ள பகுதியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.