உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மயிலாப்பூரில் சிறுபாலம் சாலையில் சேதம்

மயிலாப்பூரில் சிறுபாலம் சாலையில் சேதம்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், தினமும், 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் மேற்கண்ட சாலையில் பயணிக்கின்றன.இச்சாலையில், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவர்கள் தங்களின் அத்தியாவசியத் தேவை மற்றும் மருத்துவ தேவைக்கு இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.இதில், மயிலாப்பூர் ஏரியில் இருந்து, இச்சாலை வழியே விவசாய தேவைக்கு தண்ணீர் செல்ல, சிறுபாலம் அமைக்கப்பட்டு உள்ளது.இதன் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் காயம் அடைகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ