மேலும் செய்திகள்
தடுப்பணை சாலை சேதம்; சீரமைக்க மக்கள் கோரிக்கை
28-Apr-2025
பொன்னேரிபொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக, 2014ல், அங்குள்ள மழைநீர் கால்வாயின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது.இந்த தடுப்பணை வாயிலாக மழைநீரை சேமித்து வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டது. இந்த தடுப்பணை தரமற்ற முறையில் கட்டப்பட்டதால், இரண்டு ஆண்டுகளில் சேதமானது.சேதமான பகுதிகளை பராமரிக்காமல் அப்படியே போடப்பட்டது. இதனால், தடுப்பணையின் பல்வேறு பகுதிகளில் கான்கிரீட் கட்டுமானங்களின் சேதம் அதிகரித்தும், உடைப்புகள் ஏற்பட்டும் உள்ளன.மழைக்காலங்களில் உடைப்புகள் வழியாக மழைநீர் வெளியேறி விடுகிறது. தடுப்பணையில் மழைநீர் தேங்க வழியின்றி, பாசன வசதி கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.எனவே, சேதமான பனப்பாக்கம் கால்வாய் தடுப்பணையை புதுப்பித்து, மழைநீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
28-Apr-2025