உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பேருந்து நிறுத்தத்தில் சேதமடைந்த நிழற்குடை

பேருந்து நிறுத்தத்தில் சேதமடைந்த நிழற்குடை

திருவாலங்காடு:திருவள்ளூர் -- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், அமைந்துள்ளது, திருவாலங்காடு அம்பேத்கர் நகர். இங்கிருந்து, அரக்கோணம் மற்றும் திருவள்ளூருக்கு, பகுதிவாசிகள் மற்றும் மாணவ ---- மாணவியர் என, தினமும், 1,500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை 10 ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது. பின், சீரமைக்காததால், பகுதிவாசிகள் மழையிலும், வெயிலிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நெடுஞ்சாலையோரம் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் மாணவ -- மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ