மேலும் செய்திகள்
சேதமடைந்த சிமென்ட் சாலை வெள்ளிமேடு மக்கள் அவதி
12-Jan-2025
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது ஜே.எஸ்.ராமாபுரம். இங்கிருந்து தக்கோலம் நெடுஞ்சாலையை இணைக்கும் தார்ச்சாலை, ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 2 கி.மீ., நீளம் கொண்ட இச்சாலை, கடந்த இரண்டாண்டுகளாக தார் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது.இந்த சாலை வழியாக, அத்தியாவசிய தேவைகளுக்கு தக்கோலம், சின்னம்மாபேட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு, அப்பகுதிவாசிகள் சென்று வருகின்றனர்.தற்போது, இந்த தார்ச்சாலை சேதமடைந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும், விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.
12-Jan-2025