உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கே.ஜி.கண்டிகையில் குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயம்

கே.ஜி.கண்டிகையில் குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயம்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை கல்கி நகர் பகுதியில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் வசதிக்காக கடந்த, 2005ல் ஒன்றிய நிர்வாகம் சார்பில், 5.53 லட்சம் ரூபாயில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே கட்டப்பட்டது. இந்த தொட்டியை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், தொட்டியின் மேற்பகுதி மற்றும் துாண்கள் சேதம் அடைந்துள்ளன.துாண்களில் சிமென்ட் தளம் பெயர்ந்து விரிசல் அடைந்துள்ளது. துாண்களில் இரும்பு கம்பிகளும் துரு பிடித்துள்ளதால் எந்த நேரத்திலும் குடிநீர் மேல்நிலைத் தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளது. இந்த தொட்டி இடிந்து விழுந்தால் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அதன் அருகே உள்ள வீடுகளும் சேதம் சேதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், குடிநீர் தொட்டியை அகற்றி அதே இடத்தில் புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டி பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ