சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்
மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில், திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார், தண்டலம் - அரக்கோணம், திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி, திருமழிசை - ஊத்துக்கோட்டை என, நான்கு நெடுஞ்சாலைகளில் செல்லும் பல சரக்கு வாகனங்களில், பகுதிவாசிகள் பயணம் செய்வது தற்போது அதிகரித்துள்ளது.குறிப்பாக, உள்ளூர் மற்றும் வெளியூர் தொழிலாளர்கள் மற்றும் திருமணம் போன்ற நிகழ்ச்சிக்கு செல்லும் பகுதிவாசிகள் என, அனைவரும் சரக்கு வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றனர். சில இடங்களில் சரக்கு வாகனத்தில் ஏற்றப்படும் பொருட்களின் மேல், ஆபத்தான வகையில் பயணம் செய்து வருகின்றனர்.ஆங்காங்கே, வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாரும், இவர்களை கண்டுகொள்ளாததே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.எனவே, சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.