மீன் வியாபாரிக்கு கொலை மிரட்டல்
மப்பேடு:மப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா மாலா, 38. மப்பேடு பஜார் பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறார். கடந்த 9ம் தேதி இவரது கடைக்கு அருகில் உள்ள கடைக்கு இவரது மகன் கவின்குமார் ஜூஸ் குடிக்க சென்றார். அப்போது அங்கு போதையில் இருந்த கீழச்சேரி பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ், 25 என்பவர் கவின்குமாரை ஆபாசமா பேசி தாக்கியுள்ளார். இதை கேட்ட காஞ்சனா மாலாவையும் விமல்ராஜ் ஆபாசமாகபேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து காஞ்சனாமாலா கொடுத்த புகாரின்படி மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.