உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெரியகுப்பம் பஸ் நிலையத்தில் இரும்பு கேட் அமைக்க முடிவு

பெரியகுப்பம் பஸ் நிலையத்தில் இரும்பு கேட் அமைக்க முடிவு

திருவள்ளூர்:பெரியகுப்பம் பேருந்து நிலையத்தில், தனியார் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க, இரும்பு கேட் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள பெரியகுப்பத்தில், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பேருந்துகளும், ஆட்டோக்களும் நிறுத்தப்பட்டு, பயணியரை அழைத்துச் சென்று வருகின்றன. திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, பணியாளர்களை அழைத்துச் செல்லும் தனியார் நிறுவனங்களின் பேருந்துகள், பகல், இரவு நேரங்களில், பெரியகுப்பம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியருக்கும், அங்கு செயல்பட்டு வரும் அம்மா உணவகத்திற்கு வருவோருக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதை தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் பெரியகுப்பம் பேருந்து நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் இரும்பு கேட் அமைக்க, 2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும், பேருந்து நிலையத்தில் காலியாக உள்ள இடத்தை, நான்கு சக்கர வாகனங்கள் தரை வாடகை செலுத்தி, நிறுத்திக் கொள்ளும் வகையில், அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !