உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காட்டுபன்றியால் சேதமான நிலத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

காட்டுபன்றியால் சேதமான நிலத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

திருத்தணி:திருத்தணி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் ஆர்.டி.ஒ., கனிமொழி தலைமையில் நேற்று நடந்தது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:சென்னை--- -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும். விவசாய நிலத்தில் காட்டு பன்றிகள் சேதப்படுத்துவதால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. நஷ்ட ஈடு கேட்டு விவசாயிகள் வனத்துறையினரிடம் விண்ணப்பித்து ஏழு மாதங்களாகியும் நிவாரணம் வழங்கவில்லை. சேதமடைந்துள்ள புண்ணியம் -பொதட்டூர்பேட்டை நெடுஞ்சாலையை சீரமைக்க பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு விவசாயிகள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ