உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயில் நிலையம் - மருத்துவமனை அரசு பஸ் விட கோரிக்கை

ரயில் நிலையம் - மருத்துவமனை அரசு பஸ் விட கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ., துாரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல ஆட்டோ ஓட்டுனர்கள் 20 ரூபாய் அடாவடியாக வசூலிக்கின்றனர். இதை தவிர்க்க, அரசு பேருந்துகள் இயக்க பயணியர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடி பேருந்து வசதி இல்லை. பொதுமக்கள் திருவள்ளூர் பேருந்து நிலையத்திற்கு வந்து, அதன் பின் மாற்று பேருந்தில் கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இதை பயன்படுத்தி, ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோக்கள் 5- பேருடன் தலா 20 ரூபாய் கட்டணத்துடன் பேருந்து நிலையத்திற்கு செல்ல அழைத்துச் செல்லப்படுகின்றனர். ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ., துாரம் உள்ள அரசு மருத்துவமனைக்கும் இதே கட்டணம் தான். எங்கு ஏறி, இறங்கினாலும் அதே கட்டணத்தை அடாவடியாக வசூலிக்கின்றனர்.இதற்கு காரணம் ரயில் நிலையத்தில் இருந்து அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படாததே. மேலும், அதிகாலை 5:00 மற்றும் இரவு 10:00 மணி வரை இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது பெயரளவிற்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என இயங்கி வருகின்றன.ஆட்டோ ஓட்டுனர்களின் அடாவடி வசூலால், அப்பாவி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம் வழியாக கலெக்டர் அலுவலகம் வரை, சுற்றுப்பேருந்து இயக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ