உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சகதியான துராபள்ளம் சாலை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

சகதியான துராபள்ளம் சாலை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி:சென்னை --- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை ஓரம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே துராபள்ளம் பஜார் பகுதி உள்ளது. அப்பகுதியில், வங்கிகள், பள்ளிகள், கோவில்கள், மசூதி, மீன் மார்க்கெட் மற்றும், 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.எப்போதும் பரபரப்பாக காணப்படும் துராபள்ளம் பஜார் மீது தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலம் செல்கிறது. கடந்த சில மாதங்களாக மேம்பாலம் மற்றும் துராபள்ளம் பஜார் பகுதி சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளை தேசிய நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.துராபள்ளம் பஜார் பகுதியில், மக்கள் சென்று வர, மாற்று சாலை ஏற்படுத்தாமல், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், துராபள்ளம் பஜார் சாலை முழுதும் மழைநீர் குட்டையாகவும், சகதியாகவும் மாறுவது வழக்கம்.தற்போது பெய்த மழையில் துராபள்ளம் பஜார் சாலை முழுதும் சகதியானதால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக சாலை அமைக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த சிலர், நாற்று நடும் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சென்ற தேசிய நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைக்கும் பணியை தற்காலிகமாக துவக்கினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !