மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து
திருவள்ளூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம், செப்., வரை ரத்து செய்யப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் ஜூலை முதல் நடைபெற உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் 15ம் தேதி முதல் செப்., மாதம் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் முகாம் நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.