மேலும் செய்திகள்
விஷநெடியுடன் சரக்கு விற்ற சிவகங்கை வாலிபர் கைது
19-Sep-2024
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த ஐவேலியகரம் பகுதியில், டாஸ்மாக் கடையில் உள்ள மதுபான கூடத்தில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பாண்டியன், 47, என்பவர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 1ம் தேதி மாலை 4:00 மணிக்கு பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வளையாபதி, ஆதித்யா, குமார், தினேஷ் ஆகியோர் மது அருந்தினர். அப்போது, கடையில் வேலை பார்க்கும் ஊழியரான சுந்தரேசன் பாண்டியன் மதுவிற்கு பணம் கேட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் நால்வரும் சேர்ந்து பாண்டியனை தாக்கிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, மதுபான ஊழியர்கள் நால்வரையும் கடையை விட்டு வெளியேறும்படி கூறினர். இதனால், மீண்டும் தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, இருதரப்பினர் கொடுத்த புகாரின்படி வளையாபதி, ஆதித்யா, குமார், தினேஷ் மற்றும் பாண்டியன், கணேசன், சுந்தரசேன், வெங்கடேஷன் என, எட்டு பேர் மீது, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், பாண்டியன், கணேசன், 47, வளையாபதி, 47, ஆதித்யா, 34, ஆகிய நால்வரையும் நேற்று முன்தினம் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
19-Sep-2024