உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கபடி போட்டியில் ஏற்பட்ட தகராறு இரு மாநில மீனவர்களிடம் பேச்சு

கபடி போட்டியில் ஏற்பட்ட தகராறு இரு மாநில மீனவர்களிடம் பேச்சு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே, ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட ராமாபுரம் குப்பம் மீனவ கிராமத்தில், கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் கபடி போட்டி நடந்தது. இப்போட்டியில், ஆரம்பாக்கம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் மீனவ கிராம இளைஞர்கள் பங்கேற்றனர். போட்டியின் போது, ராமாபுரம் குப்பம் மற்றும் நொச்சிக்குப்பம் மீனவ கிராம இளைஞர்கள் இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. பூதாகரமான இந்த பிரச்னையால், இரு மாநில மீனவ கிராம மக்களிடையே பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து நேற்று, இரு மாநில மீனவ கிராமத்தின் முக்கிய நபர்களை அழைத்து, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலவத்தில் சமாதான கூட்டம் நடந்தது. கும்மிடிப்பூண்டி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கந்தன் தலைமையில் நடந்த கூட்டத்தில், இரு மாநில போலீசார் மற்றும் மீனவ கிராம பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில், சமாதானம் அடைந்த இரு மாநில மீனவர்களும், 'எந்த பிரச்னையிலும் ஈடுபட மாட்டோம்' என, உறுதி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை