உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாவட்ட தடகள போட்டி; 586 மாணவியர் பங்கேற்பு

மாவட்ட தடகள போட்டி; 586 மாணவியர் பங்கேற்பு

திருத்தணி, : திருத்தணி தனியார் பொறியியல் கல்லுாரி வளாகத்தில், திருவள்ளூர் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப்போட்டிகள் நேற்று துவங்கப்பட்டன.மாவட்ட அளவிலான, 11 குறுவட்ட அளவிலான 14, 17 மற்றும் 19 வயதுடைய மாணவியர் இடையே ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், மும்முனை தாண்டுதல், ஈட்டி எரிதல், குண்டுமற்றும் வட்டு எரிதல் போன்ற போட்டிகள் நடந்தன.இதில், 586 மாணவியர்பங்கேற்று விளையாடினர். விளையாட்டு போட்டி களை திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் பங்கேற்று துவக்கி வைத்தார்.போட்டிகளில் வெற்றி பெறும் மாணவியர் மாநில அளவில் நடக்கும்போட்டியில் பங்கேற்பர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியருக்கு பதக்கம் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். வரும், 23ம் தேதி மாணவர்களுக்கான தடகளப் போட்டி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி