மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், திருவள்ளூர் காங்., - எம்.பி., சசிகாந்த் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது.இதில், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், எம்.எல்.ஏ.,க்கள் திருவள்ளூர் ராஜேந்திரன், மாதவரம் சுதர்சனம், திருத்தணி சந்திரன், கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜன், பொன்னேரி துரைசந்திரசேகர் மாநகராட்சி ஆணையர் கந்தசாமி, எஸ்.பி.,ஸ்ரீநிவாச பெருமாள், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமாமகேஸ்வரி ஆகியோர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், வேளாண் திட்டம், மாவட்ட தொழில் மையம், சமூகநலத்துறை, வருவாய் துறை ஊரக வளர்ச்சித் துறை ஜல் - ஜீவன் திட்டம், பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறை செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.