உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளிகளுக்கு இடையே மாவட்ட விளையாட்டு போட்டி

அரசு பள்ளிகளுக்கு இடையே மாவட்ட விளையாட்டு போட்டி

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட அளவிலான அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. திருவள்ளூர் மாவட்ட அளவிலான அரசு பள்ளிகளில் பயிலும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ - மாணவியருக்கு, பல்வேறு விளையாட்டு போட்டிகள், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தன. இதில், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி, தட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. மேலும், 3,000 மீட்டர், 110 மீட்டர் ஓட்டப் பந்தயமும் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில், 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். மேலும், திருவள்ளூர் குறுவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டியும் நடந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். மாவட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோர், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !