கள்ள துப்பாக்கி பறிமுதல்; தி.மு.க., கவுன்சிலர் கைது
அரக்கோணம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகே விடுதி நடத்தி வருபவர் பாபு, 36; அரக்கோணம் ஆறாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர். இவர் வீட்டில் கள்ள துப்பாக்கி வைத்திருப்பதாக, அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின்படி, நேற்று மாலை பாபு வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அனுமதி பெறாமல் துப்பாக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 'ஏர்கன், ரிவால்வர்' மற்றும் நான்கு தோட்டக்களை போலீசார் பறிமுதல் செய்து பாபுவை கைது செய்தனர்.மேலும், துப்பாக்கி வாங்கி கொடுத்ததாக, அரக்கோணம் ஜோதி நகரில் ஸ்டீல் கிரில் வெல்டிங் கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், 36, என்பவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.