அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தி.மு.க., நிர்வாகி பலி
பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் பகுதியில், அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தி.மு.க., நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்தார். கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் கே.கே.நகரைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 38. இவரது மனைவி பவானி, 32. இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. சிலம்பரசன், கடம்பத்துார் மேற்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வந்தார். நேற்று காலை சிலம்பரசன், இருளஞ்சேரி பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளார். இதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த மப்பேடு போலீசார், உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.