உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மழையால் வடிகால்வாய் பணி பாதிப்பு

 மழையால் வடிகால்வாய் பணி பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் நேதாஜி சாலையில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி, மழையால் பாதிப்படைந்துள்ளது. திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட, பஜார் வீதியில் இருந்து நேதாஜி சாலையில், மழை காலத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கும். அதனால், வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, பஜார் வீதியில் இருந்து நேதாஜி சாலை வழியாக, சி.வி.நாயுடு சாலை வரை, மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி, கடந்த மாதம் துவங்கியது. மழை காலத்திற்குள் பணியை முடிக்கும் வகையில், துரிதமாக நடந்து வந்த நிலையில், சாலையோரம் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நெடுஞ்சாலை துறையினருக்கு பல்வேறு இடையூறு ஏற்பட்டு வந்தது. ஒரு வழியாக சாலையை அளந்து, சாலையோரம் 4 அடி அகலம், 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி, கான்கிரீட் கால்வாய் அமைத்து வருகின்றனர். இந்நிலையில், கால்வாய் அமைப்பதில், ஒரு இடத்தில் உயரமாகவும், சில இடத்தில் தாழ்வாகவும், ஏற்ற இறக்கத்துடனும் அமைக்கப்பட்டு வருவதாக, அப்பகுதி குடியிருப்பு மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், கடந்த சில நாட்களாக 'டிட்வா' புயல் காரணமாக பலத்த மழை பெய்து, பணி நடைபெறும் கால்வாயில், குளமாக தண்ணீர் தேங்கி உள்ளது. இதையடுத்து, கால்வாயில் தேங்கிய மழைநீரை, மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்றி, பணியை செய்து வருகின்றனர். இதன் காரணமாக, கால்வாய் அமைக்கும் பணியில், பாதிப்பு ஏற்பட்டு, சாலையில் குளமாக தண்ணீர் தேங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை