உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லாரி கவிழ்ந்து விபத்து ஓட்டுனர் உயிரிழப்பு

லாரி கவிழ்ந்து விபத்து ஓட்டுனர் உயிரிழப்பு

வெள்ளவேடு, வெள்ளவேடு அருகே செங்கல் சூளையில் சவுடு மண் கொட்டும்போது, லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கொல்லகேசரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 32; லாரி ஓட்டுனர். இவருக்கு, ராஜேஸ்வரி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இவர், நேற்று முன்தினம் திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதுார் ஏரியில், அரசு அனுமதியுடன் நடந்து வரும் மணல் குவாரியில் சவுடு மண் ஏற்றிக் கொண்டு, சித்துக்காடு பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு கொண்டு வந்தார். செங்கல் சூளையில் சவுடு மண்ணை லாரியிலிருந்து கொட்டும்போது, எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்தது. இதில், லாரியின் அடியில் சிக்கி ஏழுமலை உடல் நசுங்கி படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, ராஜேஸ்வரி அளித்த புகாரின்படி, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ