உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லாரிகள் மோதல் ஓட்டுநர் படுகாயம்

லாரிகள் மோதல் ஓட்டுநர் படுகாயம்

திருத்தணி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா பாப்பாத்தி மூளை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன், 52. லாரி ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் இரவு ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து, பேட்டரி தயாரிக்க பயன்படும் உதிரிபாகங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு, ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவை நோக்கி சென்று கொண்டிருந்தது.அரக்கோணம் -- திருத்தணி மாநில நெடுஞ்சாலையில், திருத்தணி புறவழிச்சாலை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் பின்பக்கம் மோதியது.இதில், லாரி ஓட்டுநர் கந்தன் படுகாயமடைந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ