உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தனியார் ஊழியரை தாக்கிய போதை வாலிபர் கைது

தனியார் ஊழியரை தாக்கிய போதை வாலிபர் கைது

திருத்தணி, : தனியார் நிறுவனத்தின் அலுவலக கண்ணாடியை உடைத்து, ஊழியரை தாக்கிய போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவலாங்காடு ஒன்றியம் தும்பிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், 45. இவர், திருத்தணி - சித்துார் சாலையில், ரவுண்டானா அருகே உள்ள டி.வி.எஸ்., பைக் ஷோரூமில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை பிரபாகரன் ஷோரூமில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, மது போதையில் வந்த வாலிபர் ஒருவர், அலுவலகத்தின் கண்ணாடியை உடைத்து தகராறு செய்தார். இதை தடுக்க வந்த பிரபாகரனையும் தாக்கினார். இதில், படுகாயமடைந்த பிரபாகரனை, சக ஊழியர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, திருத்தணி கம்பர் தெருவைச் சேர்ந்த மணிகண்டன், 27, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ