உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்விளக்கு கம்பத்தில் ஏறி போதை ஆசாமி ரவுசு

மின்விளக்கு கம்பத்தில் ஏறி போதை ஆசாமி ரவுசு

பொன்னேரி, பொன்னேரி பழைய பேருந்து நிலையம் பகுதியில், 40 அடி உயரமுள்ள மின்விளக்கு கம்பத்தில் உள்ள படிக்கட்டுகள் வழியாக, நேற்று பகல் 12:00 மணிக்கு வாலிபர் ஒருவர் ஏறிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில், அந்த வாலிபர் குதிக்க போவதாக கூறி, தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதை பார்க்க மக்கள் கூடியதால், வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பொன்னேரி காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர், வாலிபரை கீழே இறங்கிவரும்படி தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் கம்பத்தில் ஏற முயன்றபோது, ஏறினால் குதித்துவிடுவேன் என, மீண்டும் வாலிபர் எச்சரித்தார்.இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் கம்பத்தில் ஏறுவதை தவிர்த்துவிட்டு, கீழே பெரிய போர்வையை விரித்து பிடித்தபடி இருந்தனர். மற்றொருபுறம் பெரிய ஏணியை எதிர்திசையில் வைத்து, தீயணைப்பு வீரர்கள் இருவர் மேலே சென்றனர்.அவரிடம் சாதுர்யமாக பேசி, வாலிபரை கீழே அழைத்து வந்து, பொன்னேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், 'துாத்துக்குடியைச் சேர்ந்த ஆபிரகாம், 32, என்பதும், குடிபோதையில் ஏற்கனவே இரண்டு முறை உயர்கோபுர மின்விளக்கு கம்பம், மொபைல் டவர்களில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ