உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதை மாத்திரை கும்பல் தலைவன் கைது

போதை மாத்திரை கும்பல் தலைவன் கைது

திருவள்ளூர்: மெத் ஆம் பெட்டமைன் போதை மாத்திரை கடத்தல் வழக்கில் போதைப்பொருள் கும்பல் தலைவனை திருவள்ளூர் மாவட்ட போலீசார் நேற்று டில்லியில் கைது செய்து திருவள்ளூர் அழைத்து வந்தனர். திருவள்ளூர் மணவாளநகர் பகுதியில் கடந்த மாதம் 14 மற்றும் 23 தேதிகளில் முன்னீர், 28, ஜாவேத், 38, சிபிராஜ், 25 ஆகிய மூவரிடமிருந்து, 109 கிராம் மெத்தாபைட்டமின் போதை மாத்திரைகளை மணவாளநகர் போலீசார் பறிமுதல் செய்தனர். மூவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு சிறப்பு எஸ்.பி., யான திருவள்ளூர் எஸ்.பி., விவேகானந்தா சுக்லா உத்தரவின்படி ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் டில்லியில் இருந்து இணையதளம் மூலம் போதை மாத்திரைகள் அனுப்பப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து நாமக்கல்லில் வசித்து வந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த மைக்மேல், 43, சென்னையில் வசித்து வந்த காங்கோ நாட்டை சேர்ந்த கபிதா யானிக் திஷிம்போ, 36 ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து டில்லி சிறப்பு போலீசார் டில்லி சென்று போதை மாத்திரை கும்பல் தலைவனான செனெகல் நாட்டை சேர்ந்த பெண்டே, 43 என்பவரை கைது நேற்று கைது செய்தனர். பின் அவரை திருவள்ளூருக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை