உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதை மாத்திரை கஞ்சா பறிமுதல்

போதை மாத்திரை கஞ்சா பறிமுதல்

கடம்பத்துார்:கடம்பத்துார் அடுத்த ஏகாட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, கடம்பத்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடம்பத்துார் காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ஏகாட்டூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ஏகாட்டூர் அன்னை இந்திரா நகர் பகுதியில் சந்தேகத்தின் பேரில் மணிகண்டன் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதில், 10 கிராம் கஞ்சா, மூன்று கத்திகள் மற்றும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, கடம்பத்துார் போலீசார் மணிகண்டன், 28, என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை