உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொன்னேரி: பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நேற்று போதை பொருள் தடுப்பு மன்றத்தின் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. உதவி பேராசிரியர் முனைவர் சுருளிவேல், போதை பொருள் பயன்பாடு இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் மாணவர்களின் சமூக பங்களிப்பு குறித்து துவக்க உரையாற்றினார். தொடர்ந்து, திருவள்ளூர் மற்றும் பொன்னேரி நீதிமன்றங்களை சார்ந்த, சட்ட ஆலோசனை குழு மற்றும் மாவட்ட நீதிபதிகள் ஜெகதீஸ்வரி, எழிலரசி, சரண்யாசெல்வம், மஞ்சுளா, கீர்த்தனா ஆகியோர் பேசினர். அவர்கள் 'போதை பொருளுக்கு அடிமையாகும்போது ஏற்படும் பாதிப்பு, அதனால் இளைஞர்கள் எப்படி குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள், கல்லுாரி மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர், உடல் நலம், மனநலம் பாதிப்புகள், சமூக சீர்கேடுகள் குறித்து விரிவாக பேசினர். மேலு ம், 'போதை பழக்கம்தான் குற்ற செயல்களில் ஈடுபட வழிவக்கும், போதைக்கு அடிமையாகி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தை வீணாக்க வேண்டாம்' என வும் அறிவுறுத்தினர். போதை பொருள் தடுப்பதன் அவசியம் குறித்து, நேதாஜி ட்ரி பாங்க் அமைப்பின் தலைவர் மற்றும் வழக்கறிஞர் ஸ்ரீதர்பாபு பேசினார். உதவி பேராசிரியர்கள் முனைவர் வேல்முருகன், முனைவர் பவின்குமார், முனைவர் சுதன், முனைவர் மவுலிதரன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ