உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவேற்காடு எஸ்.ஏ., கல்லுாரியில் வரும் 19ல் கல்வி கடன் முகாம்

திருவேற்காடு எஸ்.ஏ., கல்லுாரியில் வரும் 19ல் கல்வி கடன் முகாம்

திருவள்ளூர்,:திருவேற்காடு தனியார் கல்லுாரியில், வரும் 19ம் தேதி கல்வி கடன் முகாம் நடக்கிறது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாணவ - மாணவியர் உயர்கல்வி பயில, கல்வி கடன் பெரும் வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், வரும் 15ம் தேதி திருவேற்காடு எஸ்.ஏ., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில், கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. பொது துறை, தனியார் துறை, கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகள் முகாமில் பங்கேற்க உள்ளன. முகாமில், கல்விக்கடன் தேவைப்படும் மாணவ - மாணவியர் பங்கேற்கலாம். ஏற்கனவே வங்கிகளில் கல்விக்கடன் வேண்டி விண்ணப்பித்தோர் மட்டுமல்லாமல், புதிதாக கடன் தேவைப்படுவோரும் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்போர், கல்வி கடன் கோரும் விண்ணப்ப படிவத்தின் நகல், இரண்டு புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், இருப்பிட, வருமான, ஜாதி சான்று, பான் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ