மேலும் செய்திகள்
மூடிய ரயில்வே கேட்டை கடக்கும் வாகன ஓட்டிகள்
01-Sep-2025
திருவாலங்காடு:திருவாலங்காடு அருகே ரயில் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார். திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கையம்மாள், 65. இவர், நேற்று காலை திருவாலங்காடு ரயில் நிலையம் அடுத்துள்ள தொழுதாவூர் ரயில்வே கேட்டை கடந்து, விவசாய நிலத்திற்குசென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
01-Sep-2025