மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு
ஆரணி, ஆரணி அடுத்த சின்னம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா, 70. நேற்று காலை பாத்திரங்களை கழுவுவதற்காக, அருகில் உள்ள குழாயடிக்கு நடந்து சென்றார். அப்போது, அறுந்து கிடந்த மின்கம்பியில் தவறுதலாக மிதித்தார். இதில், மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.