உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கலெக்டர் அலுவலகத்தில் மின் கசிவு கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு

கலெக்டர் அலுவலகத்தில் மின் கசிவு கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக கரும் புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்படுத்தியது.திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகம், திருவள்ளூர்-திருத்தணி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த வளாகம், தரை, முதல் மற்றும் இரண்டு தளங்களுடன் இயங்கி வருகிறது. இங்கு, கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலகம், சமூக நலம் உள்ளிட்ட அனைத்த துறை மாவட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் 500க்கும் மேற்பட்ட அரசு அதிகாரி மற்றும் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.நேற்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் காலையில் பணிக்கு வந்திருந்தனர். இந்நிலையில் தரை தளத்தில் உள்ள ஆவண காப்பகம் அறையின் அருகில், திடீரென மின் கசிவு ஏற்பட்டது. இதனால், அங்கு கரும் புகை சூழ்ந்தது. இதை கண்ட ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மின்சாரம் இணைப்பை துண்டித்தனர்.பின், மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, மின்கசிவு சீரமைக்கப்பட்டது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக, கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி