உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  விரிவாக்கம் செய்த நெடுஞ்சாலை சேதமடைந்ததால் விபத்து அபாயம்

 விரிவாக்கம் செய்த நெடுஞ்சாலை சேதமடைந்ததால் விபத்து அபாயம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட நான்கு வழி நெடுஞ்சாலை ஆங்காங்கே சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றனர். கவரைப்பேட்டையில் இருந்து சத்தியவேடு நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில், பூவலம்பேடு திடீர் நகர் முதல் வாணியமல்லி சந்திப்பு வரையிலான, 4 கி.மீ., சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 25 கோடி ஒதுக்கி, கடந்தாண்டு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. இச்சாலையில், வாணியமல்லி சந்திப்பு அருகே சாலையின் நடுவே பெரிய அளவில் சேதமடைந்தது. ஒரு மாதம் கடந்த பின்னரும், சேதமடைந்த சாலை சீரமைக்கப்படவில்லை என, வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை உடனே சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை