உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் விரிவாக்கம்

திருவள்ளூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் விரிவாக்கம்

திருவள்ளூர்:பாதாள சாக்கடை விரிவாக்கத்திற்கு மதிப்பீடு தயாரிக், தனியார் நிறுவனத்திற்கு நகராட்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.திருவள்ளூர் நகராட்சியில், கடந்த, 2016 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அப்போது இருந்த, 11,907 கட்டடங்களுக்கு ஏற்ப, 86.97 கி.மீட்டருக்கு குழாய் பதிக்க்கப்பட்டு உள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், மூன்று இடங்களில், சேகரிக்கப்பட்டு, புட்லுார் ஏரி அருகில், சுத்திகரிப்பு மையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.தற்போது, நகராட்சியில், மக்கள் தொகை அதிகரித்து, 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடு, வணிக வளாகங்கள் உள்ளன. அதிகரித்து வரும் வீடுகளுக்கு ஏற்ப, பாதாள சாக்கடை திட்டம் விரிவாக்கம் செய்ய நகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, நகராட்சி தலைவர் உதயமலர் பாண்டியன் கூறியதாவது:திருவள்ளூர் நகராட்சியில், விரிவாக்கப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த அரசுக்கு விடுத்த கோரிக்கையினை ஏற்று, கடந்த ஜூலை மாதம், தமிழக நிதி மேலாண்மை பிரிவு துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள பகுதியில், வடிவமைப்பு, மதிப்பீடு செய்து அனுப்பு உத்தரவிட்டனர். இதையடுத்து, வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு செய்யும் பணிக்கு, சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு அறிக்கை அளித்ததும், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும், பாதாள சாக்கடை திட்டம் விரிவாக்கம் செய்யப்ப்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை