உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில் நேரடி பேருந்து இயக்க எதிர்பார்ப்பு

பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில் நேரடி பேருந்து இயக்க எதிர்பார்ப்பு

பொன்னேரி : பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில், தடப்பெரும்பாக்கம், கொக்குமேடு, எலவம்பேடு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இந்த வழித்தடத்தில் நேரடி அரசு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் வழியாக காட்டூர், தத்தமஞ்சி, ஊரணம்பேடு கிராமங்களுக்கு செல்லும் மூன்று பேருந்துகள் மட்டுமே உள்ளன.பேருந்துகள் குறைவால், 100க்கும் அதிகமான ஷேர் மற்றும் மேஜிக் ஆட்டோக்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.இவை, பயணியரை அளவுக்கு அதிகமாக ஏற்றிக்கொண்டு அசுர வேகத்தில் பயணிப்பதால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.பொன்னேரி வேண்பாக்கம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 1,500 மாணவியர் கல்வி பயில்கின்றனர். மாலை நேரங்களில் வீடு திரும்புவதற்கு பேருந்து வசதி இல்லாமல், மாணவியர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பாதுகாப்பற்ற ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கின்றனர். இதனால், மாணவியருக்கு தினமும், 40 - 60 ரூபாய் வரை செலவாகிறது. இது, பெற்றோருக்கு பெரும் சுமையாய் அமைகிறது.எப்போதாவது மாலை நேரத்தில் வரும் அரசு பேருந்துகளையும், ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் மாணவியரை ஏற்றிச்செல்ல அனுமதிப்பதில்லை. பேருந்துகளை அங்கிருந்து அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றனர். ஷேர் ஆட்டோ டிரைவர்கள் போட்டி போட்டுக்கொண்டு மாணவியை மூட்டைபோல் ஏற்றிச்செல்கின்றனர். ஷேர் ஆட்டோ டிரைவர்களின் அடாவடித்தனமான செயல்பாடுகளை, போக்குவரத்துறையினரும் கண்டுகொள்வதில்லை.மாலை நேரங்களில் மீஞ்சூர் செல்வதற்கும், பொன்னேரி செல்வதற்கும் பேருந்துகளை இயக்கவும், ஷேர் ஆட்டோக்களை கண்காணிக்கவும் வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை