உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கவரைப்பேட்டையில் இன்று கண் சிகிச்சை முகாம்

கவரைப்பேட்டையில் இன்று கண் சிகிச்சை முகாம்

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டையில், இன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது. கவரைப்பேட்டை, தீனதயாள நகரில் இயங்கி வரும் ஸ்ரீ சத்ய சாயி சேவா மடத்தில், சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவ குழுவினர் சார்பில், இன்று, இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது. காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெறும் முகாமில், கண் பார்வை பரிசோதனை செய்து, குறைப்பாடு இருப்பின் இலவச கண் கண்ணாடி வழங்கப்படும். அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுவர்கள், சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவர் என, சத்ய சாயி சேவா மடம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !