உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக் மீது லாரி மோதல் தொழிற்சாலை ஊழியர் பலி

பைக் மீது லாரி மோதல் தொழிற்சாலை ஊழியர் பலி

போளிவாக்கம்:திருத்தணி அடுத்த, மணவூர் குப்பம் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ஆசீர்வாதம் மகன் தீபன், 31. திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், போளிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஸ்டீல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இவருக்கு, ஒராண்டுக்கு முன் திருமணமாகி கிருபா, 29, என்ற மனைவியும், 10 மாத ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.இவர், நேற்று காலை, வழக்கம்போல, 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளன்டர்' இருசக்கர வாகனத்தில் தொழிற்சாலைக்கு பணிக்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது, 7:30 மணியளவில் போளிவாக்கம் சத்திரம் பகுதியில் எதிரே டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. லாரி ஓட்டுனர் தப்பியோடி விட்டார். இதில், சம்பவ இடத்திலேயே தீபன் உயிரிழந்தார்.மணவாள நகர் போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தார்.இந்த சாலை விபத்தால், திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதுகுறித்து, இவரது மனைவி கிருபா அளித்த புகாரையடுத்து, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி