உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாம்பு கடித்து விவசாயி பலி

பாம்பு கடித்து விவசாயி பலி

ஊத்துக்கோட்டை, :ஊத்துக்கோட்டை அருகே லட்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 53; விவசாயி. நேற்று முன்தினம் காலை, தனக்கு சொந்தமான வயலுக்கு சென்றார். அப்போது, இவரை பாம்பு கடித்தது. அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு, பெரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த ஊத்துக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !