மேலும் செய்திகள்
ஆட்டோ ஓட்டுநர் மர்ம மரணம் போலீசார் விசாரணை
31-Oct-2026
பொன்னேரி: அத்திப்பேடில், விவசாய பணியின்போது மின்சாரம் பாய்ந்து, சமேஷ், 44, என்ற விவசாயி உயிரிழந்தார். பொன்னேரி அடுத்த அத்திப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சமேஷ், 44. விவசாயி. இவர் அதே கிராமத்தில், குத்தகைக்கு விவசாயம் செய்து வருகிறார். இன்று (நவ.,27), நெல் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, மோட்டாரை இயக்க, ‘ஸ்விட்சை ஆன்’ செய்தார். அப்போது, திடீரென மினசாரம் பாய்ந்து, சமேஷ் துாக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சமேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீசார், சமேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
31-Oct-2026