நெற்களம் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், இலுப்பூர் ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் 1,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், நெல், கேழ்வரகு, பூ விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் அறுவடை செய்யும் நெற்கதிர், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களில் இருந்து தானியங்களை பிரித்தெடுக்க கதிரடிக்கும் களம் இல்லாததால், ராமாபுரம் சாலையில் உள்ள கொசஸ்தலை ஆற்று உயர்மட்ட பாலம் மீதும் கோவில் வளாகத்தையும் நெற்களமாக மாற்றி நெல்லை உலர்த்த பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நெற்களம் இல்லாததால், பல்வேறு சிரமங்களை அனுப்பவிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.எனவே, இலுப்பூரில் நெற்களம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.