உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தரமான விதைகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு வேண்டுகோள்

தரமான விதைகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு வேண்டுகோள்

கடம்பத்துார், திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்வரும் கார்த்திகை பருவத்தில் வேர்க்கடலை மற்றும் நெற் பயிர்களை பயிரிட தற்பொழுது தயாராகி வருகிறார்கள்.இதையடுத்து, திருவள்ளூர் விதை ஆய்வு இணை இயக்குநர் ஸ்ரீவித்யா, மாவட்டத்தில் பூண்டி ஒன்றியம், கொழுந்தலுார் பகுதியில் உள்ள வேளாண்மைத் துறை விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் திருவள்ளூரில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது சென்னை விதை ஆய்வு துணை இயக்குநர் ரவி, சென்னை அலுவலக வேளாண்மை அலுவலர் செல்வகுமார் மற்றும் திருவள்ளூர் விதை ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.விதை ஆய்வு இணை இயக்குநர் ஸ்ரீவித்யா கூறியதாவது:''தரமான விதைகளை சரியான விலையில் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி விவசாயிகள் விதைகளை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் ரசீது பெற்று வாங்கி பயன் பெற வேண்டும்.புதிய பிற மாநில ரகங்களை வாங்கும்போது அதற்கான படிவம் - 2, முளைப்பு சான்றிதழ் உள்ளதா என, சரி பார்த்து வாங்க வேண்டும்.இடைத்தரகர்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும் பிற மாநில விதைகளை வாங்க வேண்டாம்.விவசாயிகள் உரிமம் பெற்ற அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் தரமான விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். மேலும், குறைபாடுகள் இருந்தால் வேளாண் துறை விதை ஆய்வு அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை