உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கையகப்படுத்திய நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் வெளிநடப்பு

கையகப்படுத்திய நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் வெளிநடப்பு

திருவள்ளூர்:சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு கேட்டு, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது. கூட்டம் துவங்கியதும், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பணிக்கு, கடந்த, 2009ம் ஆண்டு நிலம் கையகப்படுத்திய விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவில்லை எனக் கூறி, 50க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் முறையிட்டனர். பின், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.பின் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:பெரியபாளையம், கன்னிகைப்பேர் கால்நடை மருத்துவமனைகளில், மருத்துவர்கள் உரிய நேரத்தில் வருவது கிடையாது. சிறு, குறு விவசாயிகள் 'டிராக்டர்' கேட்டு விண்ணப்பித்து, பல ஆண்டுகளாகியும் இதுவரை வரவில்லை. ஊத்துக்கோட்டை தாலுகா, பேரட்டூர் கிராமத்தில் வரத்து கால்வாய்கள் உடைக்கப்பட்டுள்ளதை சீரமைக்க வேண்டும். மீஞ்சூர் ஒன்றியத்தில், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் பேசினர்.விவசாயிகளின் குறை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் தெரிவித்தார். கூட்டத்தில், வேளாண் இணை இயக்குனர் கலாதேவி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை