மேலும் செய்திகள்
வரும் 26ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
21-Sep-2025
நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
11-Sep-2025
திருவள்ளூர்:திருவள்ளூரில் நடந்த விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், 152 விவசாயிகளிடமிருந்து மனுவை பெற்ற கலெக்டர், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின், இரு விவசாயிகளுக்கு மானிய விலையில் எள், பச்சைப்பயிறு வழங்கினார். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மையார்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளுக்கு, மானிய விலையில் உள்ளூர் ரக கத்தரி குழி தட்டு நாற்று, மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில், மூவருக்கு 2.37 கோடிக்கான கடனுதவி ஆணை வழங்கப்பட்டது.
21-Sep-2025
11-Sep-2025