மின் கசிவால் வீட்டில் தீ விபத்து
திருத்தணி:திருத்தணி, அக்கைய்யநாயுடு சாலையில் வசித்து வருபவர் பெரியசாமி, 72. இவர், நான்கு அடுக்குமாடி வீட்டில் தரைதளத்தில் வசித்து வருகிறார். நண்பகல் வீட்டில் இருந்து அருகே உள்ள கடைக்கு சென்றார்.அப்போது வீட்டில் மின்கசிவால் திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்ததும் பெரியசாமி, திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு வீரர்கள் வந்து அரை மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக பொருட்கள் சேதம் அதிகமில்லை. இது குறித்து வருவாய் துறையினர் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.