உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீன்வளக் கல்லுாரி பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்

மீன்வளக் கல்லுாரி பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்

பொன்னேரி:தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலையின்கீழ், பொன்னேரியில், டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது.இங்கு, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்லுாரியில் பேராசிரியர்கள் அல்லாத பல்வேறு நிலைகளில், 40க்கும் அதிகமான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள், 10 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் தற்காலிக பணியாளர்களாக உள்ளனர்.பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறைந்த ஊதியத்தில், 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதாகவும், பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படுவதாகவும், அரசின் சலுகைகள் எதுவும் தங்களுக்கு கிடைப்பதில்லை என, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கல்லுாரி முதல்வர் ஜெயஷகிலா பேச்சு நடத்தினார். கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, பணியாளர்கள் பணிக்கு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ