மேலும் செய்திகள்
வாலிபரின் உயிரை பறித்த ' ரம்மி '
22-Dec-2024
திருவள்ளூர்:'ஆன்லைன்' லாட்டரி சூதாட்டம் நடத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் டவுன் போலீசார், சாய்பாபா கோவில் அருகில், ரோந்து பணியில் நேற்றுமுன்தினம் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 'ஆன்லைன்' லாட்டரி சூதாட்டத்தில் சிலர் ஈடுபட்டிருந்தனர்.இதையடுத்து, போலீசார் லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த உமர் பாரூக், 34, சபரி, 27, ரிஸ்வான், 23 ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,200 ரூபாய், பில் பிரிண்டர், 7 மொபைல் போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.புல்லரம்பாக்கம் போலீசார், தலக்காஞ்சேரி பகுதியில் 'ஆன்லைன்' லாட்டரி சூதாட்டம் நடத்தி வந்த, அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர், 35, சென்னையைச் சேர்ந்த சுரேஷ், 25, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1,200 ரூபாய், 7 மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
22-Dec-2024