மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷனில் துாங்கியவர் மீது தாக்குதல்
09-Feb-2026
சென்னை: தமிழக முன்னாள் டி.ஜி.பி., ராமகிருஷ்ணன், உடல்நலக்குறைவால் காலமானார். திருவான்மியூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 91. இவர், 1959ம் ஆண்டு ஐ.பி.எஸ்., ஆக தேர்வானார். பின் தமிழக டி.ஜி.பி., ஆகவும் பணியாற்றினார். வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவால் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு காலமானார். இவரது இறுதி சடங்கு, நேற்று, பெசன்ட்நகர் மயானத்தில் நடந்தது. இவரது மனைவி அலமேலு. தம்பதிக்கு, லட்சுமணன் என்ற மகனும், மீனாட்சி குமார் என்ற மகளும் உள்ளனர்.
09-Feb-2026