மேலும் செய்திகள்
மாமல்லபுரம் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
06-Dec-2024
பொம்மராஜபுரம் பள்ளியில் வகுப்பறை கட்ட பூமி பூஜை
26-Nov-2024
திருத்தணி, டிச. 24-திருத்தணி வருவாய் கோட்டத்தில், நபார்டு வங்கி திட்டத்தின் கீழ், திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1.41 கோடி ரூபாயில், 6 கூடுதல் வகுப்பறை கட்டடம், பூனிமாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், 1.12 கோடி ரூபாயில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள், ஒரு ஆய்வகம் கட்ட மாவட்டம் நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளன.மேலும், அம்மையார்குப்பம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 2.35 கோடி ரூபாயில், 10 கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் புச்சிரெட்டிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில், 12 லட்சம் ரூபாயில் கலையரங்கம் என, மொத்தம், 5 கோடி ரூபாய் வகுப்பறைகள் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளன.இப்பணிகள் திருத்தணி பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் பராமரிப்பு துறையின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.இந்நிலையில் நேற்று, மேற்கண்ட புதிய வகுப்பறை கட்டடம், கலையரங்கம் மற்றும் ஆய்வக கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் தலைமையில் நடந்தது.இதில் அரக்கோணம் தி.மு.க., - எம்.பி. ஜெகத்ரட்சகன் பங்கேற்று, மேற்கண்ட பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டடங்களுக்கு அடிக்கல் நட்டு பணிகளை துவக்கி வைத்தார்.அடுத்த கல்வியாண்டிற்குள் பணிகள் முடிக்கப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.நிகழ்ச்சியில், திருத்தணி உதவி செயற்பொறியாளர் முரளி உட்பட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
06-Dec-2024
26-Nov-2024