ஜாமினில் வந்தவரை வெட்டிய நால்வர் கைது
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே, வடமதுரை கிராமம், பேட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் சஞ்சய், 19. இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த காட்டன் என்பவரை வெட்டிய வழக்கில் பெரியபாளையம் போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமின் பெற்று சஞ்சய் வெளியே வந்து தினமும் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் 25ம் தேதி முதல் காலை, மாலை கையெழுத்து போட்டு வந்தார்.நேற்று முன்தினம் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு அவரது மாமா வெற்றியுடன் வீட்டிற்கு சென்ற போது, வடமதுரை பாளையக்கார தெருவில் ஆறு பேர் கொண்ட கும்பல் சஞ்சயை மறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். பலத்த காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெரியபாளையம் போலீசார் சந்தேகத்தின் பேரில் பூவலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த இன்பநாதன், 47, சின்னராசு, 28, செந்தமிழ்செல்வன், 25,வினோத், 29, ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரித்ததில் அவர்கள் சஞ்சயை வெட்டியதை ஒப்புக்கொண்டனர்.