மேலும் செய்திகள்
பிச்சாட்டூர் ஏரியில் தண்ணீர் நிறுத்தம்
6 minutes ago
இன்றைய மின் தடை:திருவள்ளூர்
7 minutes ago
விதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் அவதி
10 minutes ago
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சந்தை பகுதியில், 20க்கும் மேற்பட்ட நரி குறவர்கள் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். நேற்று மாலையில் பேரூராட்சி துாய்மை பணியாளர்கள், மது அருந்தி விட்டு, போதையில் நரிக்குறவர்களை தாக்கினர். நரிக்குறவர்களின் வீட்டு உபயோக பொருட்களை சாலையில் வீசினர். இதனால் ஆத்திரமடைந்த நரிக்குறவர்கள் தங்களுடைய குழந்தைகளுடன் பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகம் முன் ஆர்பாட்டம் நடத்தினர். அப்போது எங்களுக்கு நிரந்தர வீடு அரசு அமைத்து தர வேண்டும் என, வலியுறுத்தி நரிக்குறவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். போலீசார் சமரசம் செய்து அனுப்பினர்.
6 minutes ago
7 minutes ago
10 minutes ago